Monday, December 7, 2009

வக்கிரம் மற்றும் வர்கோத்தமம்

வக்கிரம் :-

ஜாதகத்தில் வக்கிரம் என்பது சூரியனுக்கு ஐந்து மற்றும் ஆறு மற்று ஏழாம் இடங்களில் கிரந்கங்கள் இருந்தால் அக்கிரகம் வக்கிரம் அடைந்துள்ளது என்று பல நூல்கள் குருரிபிடுகின்றது வக்கிரம் அடைந்த கிரகம்


உச்சம் அடைந்த கிரகதிருக்கு இணையான பலனை கொடுக்கும் ,

உடனே ஜாதகத்தை தூக்கி கொண்டு குதிகாதிர்கள் , வக்கிரம் அடைந்த கிரகம் லக்னதிருக்கு எங்கு உள்ளது அது சுப கிராம நன்மை தர கூடிய இடத்தில் உள்ளத என்று கவனியுங்கள் , நலல் நிலையில் இருந்தால் நிச்சயம் உச்ச பலன் தரும் உங்களுக்கு ,வர்க்கொதமம் இது ராசி கட்டத்திலும் நவம்சகட்டதிலும் கிரகம் ஒரே ராசியில் இடம் பெற்று இருக்குமானால் அது வர்க்கொதமம் என்று சொல்ல படுகின்றது
வர்கோதமம் பெற்ற கிரகம் ஆட்சி பலன் பெற்ற கிரத்தின் பலனை கொடுக்கும் ,உதாரணமாக கும்பத்தில் உள்ளசுக்ரன் ரசிகட்டதிலும் கும்பத்தில் இருந்து நவம்ச கட்டத்திலும் கும்பத்தில் இருந்தால் சுக்ரன் துலாம் ராச்யில் இருதால் என்ன பலனோ அதே பலன் கும்பத்தில் இருந்தாலும் கொடுப்பார் ,லக்னம் வர்கொதம் பெற்ற ஜாதகன்
மேலும் சிறப்பு அடைவான்

சூரியனுக்கு ஐந்து மற்றும் ஒன்பதில் சுபர் நிற்கும் பலன்

பாரப்பா இன்ன மொன்று பகரக்கேலு ,பகலவனுக்கு கலைமதி கோணமேற,
சேரப்பா பலவிததால் திரவியம் சேரும் ,செல்வனுக்கு வேட்டளுண்டு கிரகமுண்டு ,
ஆரப்பா அமடுபயமில்லை . அர்த்த ராத்திரியில் சப்தம் கேட்பான் கூறப்ப குமரனுக்கு எழுபதேட்டில் கூற்றுவனார் வருங்குரியை குறிப்பாய் சொல்லே ,

சூரியனுக்குஐந்து மற்றும் ஒன்பாதம், வீடுகளைல் சந்திரன் இருந்தால் தனித்து இருக்க வேண்டும் , அப்படி இருந்தால் பலவித நாள் யோகங்கள் உண்டாகும் ,எந்த வித கெட்ட பலனும் ஏற்படாது , காரணம் ஜாதகத்தில் கெட்ட யோகங்கள் இருப்பின் அதை முடக்குவது இந்த யோகத்தின் வேலை

மற்றும் இந்த ஜாதகம் அர்த்த ராத்திரியில் எழுப்பி kanakku கேட்டாலும் சொல்வான் , அவ்ளோ விளுபுடன் இருப்பான் ,

ஆனால் எழுபத்தெட்டு வயதில் இவனுக்கு மரணம் உண்டு என்று சொல்கிறார் புலிப்பாணி அய்யா சொல்கிறார்

ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நின்றால் வரும் பலன்

பாரப்பா பகலவனும் சனிசெயபாம்பு,பகருகின்ற இக்கோள்கள் ஆறில் நிற்க ,
கூறப்பா குமாரனையும் சத்துரு கண்டால் குவலயத்தில் புலி கண்ட பசு போல ஆவார்
சீரப்பா செம்பொன்னும் சென்னாடுண்டு செயலாக வாழ்ந்திருப்பான் விதியுன்தீர்க்கம் ,
ஆரப்பா அததலதொன் விழுந்து கெட்டால் அப்பனே அரியை போல இருப்பான் பாரே ,
சூரியனும் செவ்வியும் ராகுவும் கேத்வும் ஆரமிடமாகிய சத்ரு ஸ்தானத்தில் இருந்தால் , அந்த ஜாதகர் ஜாடகியை கண்டவுடன் பகைவர்கள் பசு போல அடங்கி ஒடுங்கி விடுவார்கள் , அப்படி ஒரு பவர் அவர்களுக்கு ஏற்படும் நாடு நகர சேர்க்கையும் உண்டுய் ,
ஆயுள் தீர்க்கம் மேலும் ஆறாம் அதிபதி பழம் இழந்து கெட்டால் அந்த ஜாதகனுக்கு இன்னும் பலமான யோகம் உண்டு என்று உறைகிறார் .உதாரணம் பெண் என்றால் ஜெயலதவையும் ஆண் என்றால் ரஜினியையும் ஒப்பிடலாம் , நீங்கள் கேட்கலாம் என் கருனாதியுடன் ஒப்பிடலாமே என்று நமது முதல்வருக்கு ராஜ தந்திரம் யோகம் உண்டு அது தன் அவரது பலம் ,
யாரை எங்கு அடித்தால் என்குய் விழுவான் என்பது ராஜ் தந்திரம்

Saturday, December 5, 2009

பாக்யதிபதியால் வரும் யோகம்

அறிவித்தேன் ஐந்துக்கு ஐந்தூனும் அப்பனே அப்பதிக்கு கோனந்தன்னில் ,
தெரிவித்தேன் திரவியமும் காடியுண்டு திடமான மனைகட்டி ஆளுவானம் ,
குரிவிதேன் ஆலயமும் பழுதுபர்ப்பான் கொற்றவனே ரசித்த பாதிரங்கோல்வான் ,
புரிவிதேன் பதியோனும் வியமாறேட்டில் பதறாதே பண்டு பொருள் விரயமமேஐந்து க்கு ஐந்தாம் அதிபதி ஆகிய ஒன்பதாம் அதி பத்தி(திரிகொனாதிபதி ) ஐந்தாம் கோணதிபதிக்கு கோணத்தில் இருக்க இருவருமே நல்ல நிலையில் இருக்க கட்டாயம் நல்ல அஸ்திவாரம் பழம் உள்ள வீடு கட்டுவான் , மேலும் பல கோவில்களுக்கு திருப்பணி உதவி செய்வது , மற்றும் ஆலயங்களின் திருப்பணிகளை தாமே முன்னின்று நடத்துவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவான் , இவர்கள் நல்ல நிலையில் இருதால் இப்படி மாறாக
கிரகங்கள் பழுது அடைந்தாள்அலையை பணிகளை முன் நின்று நடத்துவான் ஆனால் ஆலயம் பாதி வருவதை குள் இவன் கோயில்ன் சொத்தை முழுமையாக தின்றுவிடுவான் , யோகம் கிடைக்கும் ஆனால் அதை தவறாக பயன் படுத்தி விடுவார்கள் ,


எல்லயோகமும் அப்டிதான் நலல் நிலையில் இருந்தால் அப்துல் கலாம் போல வரலாம் , இல்லை என்றால் கருணாதி போல வரலாம் ,

அடுக்கு மாளிகை கட்டி வாழும் ராஜா யோகம்

பாடிடுவாய் புந்தி வெள்ளி நாளில் நிற்க ,பகருகின்றபதிஎன்னும் கேந்திரமேற
நாடிடுவாய் நாளிலுல்லோன் சுபர்கள் நோக்க ,நர்சுகமும் மேடையுமுண்டு நாடுமுல்லோன் ,
கூடிடுவாய் குமாருக்கு யோகம் மெத்த ,குவலயத்தில் பேர்விளங்க நிதியுமல்லொன் ,
ஆடிடுவாய் ஆரல் நிற்கும் நிலையை பார்த்து அப்பனே புவியூர்க்கு கூறுவீர்


புதன் சுக்ரன் லக்னதிருக்கு நாளில் நிற்க நாலமிடது அதிபதியும் கேந்திரமேரி நிற்க நாலாம் இடத்தில் நின்ற கோள்களை சுபர்கள் நோக்க இந்த யோகம் கொண்டவர்கள் பல அடுக்கு மாளிகைகள் கட்டி வாழ் வர்கள் , இதற்க்கு செவ்வாய் உச்சமாக இருந்து விட்டால் பல அபார்ட்மென்ட் கட்டி விடுவான் , யோகத்தில் சிறிது பங்கம் இருந்தால் அல்லது மாற்ற கிரக நிலைகள் ஒத்துழைப்பு கொடுக்க வில்லையென்றால்


சிறிய அளவில் மூணு பெட்ரூம் ஒரு ஹால் பெரிய கிச்சன் இந்த மாதிரி வீடு கட்டி நலமுடன் வாழ்வான் என்று பொறுல் .

சூரியனுக்கு முன்னாடியும் பின்னாடியும் புதன் கிரகம் நின்றால் என்ன பாடு படுத்துவார் என்று அய்யாவே சொலிறார் பாருங்களேன்

தானென்ற இரவிக்கு முன்னே புந்தி, தனித்திருக்க புனிதனடா தரிதர தோஷம் ,
தானென்ற இரவிக்கு பின்னே புந்தி ,தரநிதன்னில் பே விளங்கும் தன்முல்லோன் ,
தானென்ற இரவிக்கு பின்னே சேயும் தங்கிடவே புத்திரர்கள் மெத்த உண்டாம் ,
தானென்ற குருவோடு நீலன் மேவ தரிதனில் செவிடனட முடவன் பாரே ,


என்னால் பாடலில் உள்ள கிரகங்களில் புனை பெயர்களை எல்லா இடுகையிலும் குறுப்பிட முடியவில்லை நான் சொல்வதை வைத்து இன்ன கிரகதிருக்கு இன்ன புனை பெயர் என்று பாடல் வரிகளை வைத்து புரிந்து கொள்ளுங்கள் ,


சூரியனுக்கு முன்னால் புதன் நின்றால் ,ஜென்மன் நற்குணம் உள்ளவன் ஆனால் வறுமையில் வாடுவான் ,
சுரியனிக்கு பினால் புதன் இருந்தால் , நல்ல வசதி படைத்த பணக்காரனாக வாழ்வான் ,
சுரியனிக்கு பின்னால் செவ்வாய் இருந்தால் நல்ல குழந்தை செல்வம் உண்டு ,

சூரியனுக்கு பினால் குருவும் சனியும் (நீலன்) கூடியிருந்தால் அபிரவி அவன் செவிடனகதான் இருப்பான் என்று அடித்து சொல்கிறார் நமது புளிபான்னி அய்யா ,

தாந்த்ரீகம் மாந்த்ரீகம் அறியும் யோகம்

பாரப்பா இன்னுமொரு புதுமைகேளு ., பால் மதிக்கு நாலோனும் சுங்கன் கூடிடில் ,
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும் ,கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி ,
வீரப்பா வரகிதுர்க்கை தேவியம்மன், விதமான பூஜதனை மண்ணோர் போற்ற ,
சீரப்பா போகருட கடத்ஷதாலே ,செப்பினேன் புலிப்பாணி செயலைத்தானே ,பால் மதி வளர்பிறை (சந்திரன்) க்கு நாலாம் இடத்து அதிபதியும் , சுக்கிரனும் கூடி , எந்த இடத்தில் இருந்தாலும் ஜென்மன் மந்திரவாதி என்று உரைத்தேன் , என்று கூறுகிறார் , காலி வராகி போன்ற அம்மன் சக்தியை பெறுவான் , என்று கூறுகிறார் ,

நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்ன வென்றால் இவாருள்ள ஜாதக அமைப்பு அறுபது வருடங்களுக்கு ஒருமுறை அல்லது நூறு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் , அப்டி வரும் பொழுது சந்திரனும் வளர்பிறையை இருக்க வேண்டும் , சுக்கிரன் மூல திரிகூனத்தில் ஆட்சி பெற்று இருக்க வேண்டும் , அது என் என்றால் லக்னதிருக்கு நலம் இடதிபதி சுகரன் ஆகா வரும் பொழுது அசுர குறு அல்லவா சுகரன் அவர் நல்ல நிலையில் இருந்தால் அவன் செய்யும் மந்திர விதைகள் நல்லவர்களுக்கு பயன் படும் , சுக்ரன் சிறிது பழுது என்றாலும் அவர்கள் பில்லி சூனியம் வைக்கும் மனிதர்களாக மாறி விடுவார்கள் , இது அந்த காலதிருக்கு நாம் இந்த காலதிருக்கு வருவோம் ,


இப்பொழுது இந்த யோகம் பழுது படாமல் நல்ல நிலையில் இருந்தால் அப்துல் கலாம் போல நல்ல விஞ்ஞானி யாக வரலாம் இல்லை
யோகம் பழுது பட்டால்

பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துல்காதிகான் மாதிரி அயல் நாட்டுக்கு ரகசியகளை விற்று சம்பாதிக்கும் குணம் உடையவராக இருக்கும் , இது அவர் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது , பெரிய அளவில் சொல்லும் பொழுது இதை சொல்கிறோம் , சிறிய அளவில் மாந்திரிகம் பில்லி சூனியம் என்று சொல்கிறோம் , எல்லாமே ஒன்றுதான் ,

தாரை யோகம்

பாரப்பா பால் மதிக்கு நான்கில் வெள்ளி , பாங்குள்ள வெள்ளிக்கு நான்கில் இந்து ,ஈரப்பா இல்லுக்கு இவர்கள் நான்கில் ,இடிபோல குமுருமடா தாரை யோகம் ,சீரப்பா சென்மனுக்கு சிவிகை நாடி ,சிறப்பான வாகனமும் நிலமும் செம்பொன் ,கூறப்பா போகருட கடாத்ஷதாலே ,குடினாதன் பெலமரிந்து கூறுவாயே ,இந்த பாடலில் கூற வருவது என்ன வனில் பால் மதிக்கு (சந்திரன் வளர் பிறை ) நான்கில் சுக்ரன் அல்லது சுகிரனுக்கு நான்கில் பால் மதி அல்லது இவர்கள் இல்லத்துக்கு நான்கில் இருந்தாலும் இடிபோல முழங்கும் தாரை யோகம் உண்டு என்று கூறுகிறார் , சிவிகை யோகமும் உண்டு என்று சொல்கீறார் ,தரை யோகத்தால் நல்ல வாகனம் மற்றும் நிலம் தோப்பு வகையறாக்கள் நிறைய கிடைக்கும் என்று சொல்கிறார் . இன்னோவா கார் ப்ம்வ் கார் போன்றவற்றைinnova car , bmw car pondravatrai வைத்ருபார்கள் , மேலும் ஊட்டி கொடைக்கானலில் பெரிய பெரிய காபி எஸ்டேட் இருக்கும் , கிரகங்கள் வலு இழந்து இருந்தால் யோகம் குறைவாக கிடைக்கும் ,

Wednesday, December 2, 2009

தேவர்கள் போன்று இருக்கும் யோகம்

பாரப்பா இருமூன்றில் புந்திநிர்க்க ,பகருகின்ற பரமகுரு எழில்நிர்க்க ,ஆரப்பா அசுரகுரு எட்டில்நிற்க . அப்பனே மீனத்தில் அருக்கன்பிள்ளை,வீரப்பா வில்வளவில் சேயும் நிக்க , விளன்குகின்றமற்றோகள் எங்கும் நிக்க ,,குவளையத்தில் தேவன் என்று கூறினேனே ,


இப்பாடலில் புலிப்பாணி அய்யா கூற வரும் கருத்து என்னவெனில்

இருமூன்றில் (இரண்டு+ மூன்று=ஆறு ) அதாவது ஆறாம் இடத்தில் புந்தி (புதன் ) நிற்க குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்க மீனம் ராசியில் அருக்கன் பிள்ளை (செவ்வாய் ) நிற்க , அசுரகுரு எட்டில் நிற்க (சுக்கிரன் அசுர குரு ஆவார் )மாற்ற கோள்கள் எல்லாம் எந்த இடத்தில் இருந்தாலும் , அப்ப்ரவி எடுத்த ஆணு பெண்ணோ தெய்வீக அம்சம் போருந்தியவர்களா இருப்பார்கள் ,

மேற் சொன்ன இடங்களில் அந்த அந்த கிரகங்கள் நட்பு ஆட்சி உச்சம் பெற்று இருப்பின் கோடியில் ஒரு பேரழகை பெற்று இருப்பார்கள் , கொஞ்சம் கிரகங்கள் வலிமையிலந்தால் அதற்கு தகுந்தாற்போல இருப்பார்கள் ,


பொதுவாக லக்னதிருக்கு ஏழு எட்டு ஆறாம் இடங்களில் சுபர் இருபது நல்ல யோகம் ஆகும் . காரணம் முறையே அவர்களின் பார்வை ஏழாம் இடமான லக்னம் இரண்டாம் இடம் மற்றும் பன்னிரெண்டாம் இடங்களின் விழும் . சுப கிரங்களின் பார்வை இம்மூன்று இடங்களில் விழுந்தால் அந்த ஜாதகர் தெய்வீக அம்சம் பெற்று விடுகிறார் . இதை புலி பாணி அய்யா சுர்க்கமாக சொல்கிறார் ,


புலிபாணி சித்தரின் ஜோதிட ஆராய்ச்சி

புலிப்பாணி சித்தரின் ஜோதிட ஆராய்ச்சியில் மனித குலத்திருக்கு தேவையான தகவல்களை தேவையானவற்றை கொடுத்துள்ளார் , அவை தமிழ் பாடல் களின் வாயிலாக ஆராய்வது சற்று கடின மான ஒன்று அதை நான் கொஞ்சம் சிற மேற் கொண்டு செய்கிறேன் , இதில் தவறுகள் ஏற்படலாம் . தவறுகள் ஏற்படும் பட்சத்தில் எனக்கு தெரிவியுங்கள் நான் திருத்தி கொள்கிர்னே நண்பர்களே . சரி விசயதிருக்கு வருவோம் ,நமக்கு சில யோகங்கள் ஜாதகத்தில் இருக்கும் , அதை தெரிந்து கொள்வதற்கு நாம் பிரயத்தன படுவோம் , நிறைய ஜோதிட நூல்கள் யோகத்தை பற்றி தெளிவாக குரிபிடுகின்றன ,
ஆனால் மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேராவது நம்மை நம்மை தெரிந்து வைதிருபதர்க்கே குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து யோகங்கள் சிறப்பாக செயல் பட வேண்டும் . ஒரு சிலருக்கு ஓரிரு யோகங்கள் வலுவாக அமைத்திருக்கும் அப்படி பட்ட ஜாதகங்கள் கூட ஒரு சில உறவினர்களுக்கு மத்தியில் தெரிந்தவராக பெரிய அளவில் செல்வந்தராக இருப்பார்கள் , ஆனால் சமுதாயத்தில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அடக்கத்துடன் இருப்பார்கள் ,

ஆனால் சமுதாயத்தில் எல்லோர் பார்வை படும் படியாக தெரிய குறைந்த பட்ச நன்கு அல்லது ஐந்து யோகங்கள் தேவை படும் , இதில் புலி பாணி அய்யா மிக சிறந்த யோகங்களை மட்டும் குறிப்பிட்டு இவற்றில் ஒன்று இரண்டு யோகம் கிடைத்தால் கூட போதும் என்று சொல்கிறார் . அவைகளை பற்றி மட்டும் குறி படுகிறேன் நான் , நான் அமெரிக்கா நாட்டு பிரஜை எனக்கு வேலை பளு அதிகம் , தயவு செய்து நண்பர்கள் பாடங்களை படித்து பின்னூட்டம் இடுங்கள் ஆனால் உங்கள் ஜாதகங்களை கொடுத்து என்னை பார்க்க சொல்லாதிர்கள் எனக்கு அதற்கு நேரமில்லை , நான் கற்று அறிந்த அறிவு பலருக்கு பயன் பட்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பதிவை தொடக்கி உள்ளேன் , இப்பதிவில் தவறு ஏற்படின் என்னை தொடர்பு கொண்டு குறிபிடுங்கள் வர வேற்கிறேன் , நீங்களும் படித்து உணர்ந்து கொள்ளுங்கள் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் . சொல்கிறேன்


சரி யோகம் பற்றிய அவரின் செய்யுளுக்கு வருவோம் , முக்கியமான சிலவற்றை மட்டும் குறிபிடுகிறேன் ,லாட்ரி அல்லது உழைக்காமல் தனம் கிடைக்கும் யோகம் அது எதாவது ஒரு வழியில்

கூறப்ப கருமதிநாளில் தோன்ற ,கொற்றவனே குடினாதன் கோணம் ரெண்டில் ,சீரப்பா சென்மனுக்கு புதையல் கிட்டும் ,செகத்தில் நல்ல பேர்விளங்கும் செய்யுல்வல்லோன் ,
ஆரப்பா அச்வங்கள் காடியுண்டு அப்பனே அன்னசத்திரமுன்கட்டி , வீரப்ப வேகுபெர்க்கு அமுதளிப்பான் விதமான புலி பாணி விளம்பினேனே

இந்த செய்யுளில் அய்யா கூற வருவது என்ன வென்றால் கருமாதி (கர்ம அதிபதி , பத்தாம் அதிபதி ) நாங்கம் இடத்தில் இருக்க , குடி நாதன் (நான்காம் அதிபதி ) கோணம் ரெண்டில் இருக்க (திரி கோணம் அல்லது இரண்டாம் இடம் ஏதேனும் ஒன்றில் இருக்க ) செல்வனுக்கு புதையல் கிடைக்கும் என்று உரைக்கிறார் , அக்காலத்தில் புதையல் என்பது மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை நகைகளை பொற்காசுகளை மண்ணில் அடியில் புதைத்து வைப்பர் அது அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது என்பதற்கு (தற்பொழுது சுவிஸ் பேங்க் இருபது போல ) மண்ணில் புதைத்து வைத்து அதற்கு ஆதாரமாக ஏதேனும் மரக்கன்றுகளை நடுவது அவர்கள் வழக்கம் , இப்பொழுது அதெல்லாம் சுவிஸ் பேங்க் இல் பொய் சேருகிறது , அது மக்களுக்கோ அல்லது இந்தியா அரசாங்கத்துக்கோ சத்தியமாக கிடைக்காது அதெல்லாம் வேல்லைகரனுகுதன் பொய் சேரும் , ஒரு வேலை அவனுக்கு இந்த யோகம் இருக்கலாம் . நமக்கு நமது ஒன்று விட்ட பெரிய்யப்ப , மாமா . சித்தப்பா , இப்படி மூன்றாம் முறை உறவினர்களின் சொத்து நமது கைக்கு கிடைக்காமல் வந்தால் அதும் புதையல் யோகத்தில் தான் சேரும் ,

இது போன்று உழைக்காமல் வரும் சொத்திருக்கு அல்லது தனதிருக்கு அதிபதி ஆவார்கள் இந்த யோகம் உடையவர்கள் ,

பின்குறிப்பு :- மேற் குறிப்பிட்ட இடங்களில் கிரங்கள் பகை நீச்சம் அடையாமல் இருந்தால் பலன் முழுதாக கிடைக்கும் , பகை நீச்சம் அடைந்தாள் பலன் கல் வாசி கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்